#BetheRealMan ரஜினிக்கு சவால் விட்ட சிரஞ்சீவி !!

#BetheRealMan ரஜினிக்கு சவால் விட்ட சிரஞ்சீவி !!

#BetheRealMan ரஜினிக்கு சவால் விட்ட சிரஞ்சீவி !!
X

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3 ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துவிட்டது மத்திய அரசு. இதனால் பொதுமக்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

பல திரையுலகப் பிரபலங்கள் வீட்டில் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து தங்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி பலரும் ட்விட்டர் பக்கத்தில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி, ஒருவருக்கு ஒருவர் சவால் விடுத்து வருகிறார்கள்.

அதில் ஏப்ரல் 19-ம் தேதி அன்று #BeTheRealMan என்ற ஹேஷ்டேகை உருவாக்கினார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா. அதில் முதலாவதாக இயக்குனர் ராஜமெளலிக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த சவால் என்னவென்றால் மனைவிக்கு உறுதுணையாக வீட்டு வேலைகள் பார்த்து வீடியோ வெளியிட வேண்டும்.

ராஜமெளலி இந்த சவாலை ஏற்று, வீட்டு வேலைகள் செய்த வீடியோவை வெளியிட்டு ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு பரிந்துரைத்தார். இருவருமே இந்த சவாலை ஏற்று இதர நடிகர்களுக்குப் பரிந்துரைத்தார்கள்.

இதில் ஜூனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவிக்கு பரிந்துரை செய்தார். #BetheRealMan சவாலை ஏற்று வீட்டு வேலைகள் செய்வது, அம்மாவுக்கு தோசை ஊற்றிக் கொடுப்பது என வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தச் சவாலை தனது நண்பர்களான அமைச்சர் கே.டி.ராமா ராவ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சிரஞ்சீவி வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது ; "இதுதான் பீம் தாரக். இதுதான் இன்று நான் செய்வது. இப்போது இந்த வீடியோதான் உங்களுக்கான ஆதாரம். கே.டி.ராமா ராவ் மற்றும் என் நண்பர் ரஜினிகாந்த் ஆகியோரை நான் பரிந்துரைக்கிறேன். #BetheRealMan சவால் இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

Newstm.in

Next Story
Share it