பாதுகாப்பு உடைகளை பதுக்கிய சீனா! சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய அமெரிக்கா!

பாதுகாப்பு உடைகளை பதுக்கிய சீனா! சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய அமெரிக்கா!

பாதுகாப்பு உடைகளை பதுக்கிய சீனா! சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய அமெரிக்கா!
X

அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி பீட்டர் நவரோ, நேற்று பேசுகையில்,  சீனா பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ)  கொரோனா தாக்கத்திற்கு பிறகு பதுக்கி வைத்துக் கொண்டு, இப்போது அதிக விலைக்கு விற்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறினார். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அவற்றை பதுக்கி வைத்திருந்தது என்றும், பதுக்கி வைத்திருந்ததிற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதன் விளைவாக இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் பாதுகாப்பு உபகரணங்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. "அவர்கள் 18 மடங்கு அதிகமான விலைகளைக் கொடுத்து முகமூடிகளை வாங்கினார்கள். கண்ணாடி மற்றும் கையுறைகள் இரண்டிற்கும் அதிக செலவுகளை இப்படி சீனா அதிகரிக்க வைத்துள்ளது" என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்து நியாயமான விசாரணைக்கு அழைப்பு விடுத்த நவரோ, சீனாவின் நடத்தை சர்வதேச ஒழுங்கிற்கு ஏற்ப இல்லை என்று புகார் கூறினார். 

ஏற்கனவே குறைபாடுள்ள முகமூடிகளை விற்ற குற்றச்சாட்டுக்கு ஆளானது சீனா. பின்னர், ஐரோப்பிய நாடு மனிதாபிமானத்துடன் நன்கொடையாக கொடுத்த பாதுகாப்பு உபகரணங்களை, இத்தாலிக்கு விற்றதாக சீனா மீது இன்னுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் பாதுகாப்பு உபகரணங்களை பதுக்கியதாக கூறப்படும் சம்பவம் சர்வதேச அளவில் சீனா மீதான நம்பிக்கையை உலக நாடுகளிடையே சீர்குலையச் செய்துள்ளது.

newstm.in

Next Story
Share it