சிறார் பாலியல் வழக்கு... முன்னாள் பாதிரியார் மீது புகார்!

சிறார் பாலியல் வழக்கு... முன்னாள் பாதிரியார் மீது புகார்!

சிறார் பாலியல் வழக்கு... முன்னாள் பாதிரியார் மீது புகார்!
X

வாஷிங்டன் முன்னாள் பாதிரியார் தியோடர் மெக்கரிக்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் மற்றொரு பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

1980களில் மற்ற பாதிரியார்களுடன் இணைந்து சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகார்கள் காரணமாக தியோடர் மெக்கரிக் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் நியூஜெர்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நியூஜெர்சியின் மிச்சிகன் பிஷப்பாக தியோடர் மெக்கரிக் இருந்த போது, அவர் மற்றும் 5 பாதிரியார்கள் இணைந்து, தனக்கு 11 வயது முதல் 16 வயது இருந்த வரை, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்தாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் தியோடர் மெக்கரிக் தவிர்த்து, பாதிரியார்கள் அந்தோணி நார்டினோ, ஆண்ட்ரு தாமஸ் ஹெவிட், ஜெரால்ட் ரூனே, மைக்கேல் வால்டர், ஜான் லாபெராரா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it