முதலமைச்சர் வருகை... அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை!

முதலமைச்சர் வருகை... அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை!

முதலமைச்சர் வருகை... அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை!
X

ஜூன் 26ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தருவதையொட்டி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல்வர் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு,  அமைச்சர்கள் , சட்டமன்ற,  நாடாளுமன்ற உறுப்பினர்களும்  பங்கேற்க உள்ளனர். அதன் பின்னர் முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணையை முதல்வர் பார்வையிட இருக்கிறார். . மத்திய மண்டல காவல்துறை தலைவர் அமல்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் முதல்வருக்கு அருகாமையில் இருந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

newstm.in

Next Story
Share it