முதலமைச்சரின் நிவாரண நிதி !! வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன பிரச்சனை !! தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி !!

X

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.கொரோனா பாதிப்பை அதிகம் இருக்கும் பகுதிகளில் மட்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இந்த சமயத்தில் கொரோனா தடுப்பிற்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு விருப்பமுள்ளோர் நிதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பல தரப்பினரும் நிதி வழங்கினர்.

இதற்குடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அவரது வழக்கில் , கொரோனா தடுப்பிற்கு நன்கொடையாக எவ்வளவு தொகை பெறப்பட்டது என்ற விவரம் அரசின் இணையத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது , அப்பொழுது வழக்கை தொடர்ந்தவர் தரப்பில்,பிற மாநிலங்களில் உள்ள அரசு இணையதளங்களில் கொரோனாவிற்காக பெறப்பட்ட தொகை குறித்த தகவல்கள் இருக்கின்றது.

ஆனால் தமிழக இணைய தளத்தில் எந்த தகவலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. கொரோனாதொடர்பான தகவல்களை இணையத்தில் வெளியிட அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என்று கேள்வி எழுப்பி ,அரசு உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

Newstm.in

Next Story
Share it