திரையுலகினருக்கு முதலமைச்சர் அட்வைஸ் !!

திரையுலகினருக்கு முதலமைச்சர் அட்வைஸ் !!

திரையுலகினருக்கு முதலமைச்சர் அட்வைஸ் !!
X

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த நபர்கள் , அரசியல் தலைவர்கள் , சமூக ஆர்வலர்கள் , திரையுலகத்தினர் உதவி செய்து வருகின்றனர்.

அதன் வரிசையில் , நடிகர் விஜய் நேற்று 1.30 கோடி ரூபாய் கொரோனா நிதி தருவதாக அறிவித்தார். அதில் புதுச்சேரி மாநிலத்துக்கு 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்து உள்ளார். இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நடிகர் விஜய் கொரோனா நிதியாக புதுச்சேரிக்கு  5 லட்ச ரூபாய் வழங்கியுள்ளதை பாராட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், திரையுலகத்தை சேர்ந்த மற்ற நடிகர்களும், உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newstm.in

Next Story
Share it