முதல்வர் அதிரடி.. ஊழலில் ஈடுபட்ட 470 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

 | 

லஞ்சம் வாங்கியது மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக கருதப்படும் 470 அதிகாரிகளின் மீது உத்தரப்பிரதேச மாநில உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளதாவது: “முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்த ‘சகிப்புத்தன்மையற்ற கொள்கை’யின் மூலம் லஞ்சம், ஊழல் போன்ற செயல்களில் ஈடுபடும் அரசு அதிகாரிகளைக் கண்காணித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

யோகி

குறிப்பாக லக்னோ, மீரட், பாரய்லி, ஆக்ரா, அயோத்யா, கோராக்பூர், வாரணாசி, பிராயக்ராஜ், ஜான்சி மற்றும் கான்பூர் பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த தகவலின் படி கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல், லஞ்சப் புகாரில் இதுவரை 1,156 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில், 297 வழக்குகள் தீவிர விசாரணையாகவும், 467 வழக்குகள் வெளிப்படையாகவும் நடைபெற்றன. தற்போது லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக கருதப்படும் 470 அரசு அதிகாரிகளின் மீது உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக, 207 வழக்குகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP