1. Home
  2. தமிழ்நாடு

‘நமக்கு நாமே திட்டம்’ மற்றும் நகர்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

‘நமக்கு நாமே திட்டம்’ மற்றும் நகர்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!


சேலத்தில் 31 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் நமக்கு நாமே திட்டத்தை துவக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

திராவிட இயக்க வரலாற்றில் பெரும் பங்கு வகித்த இடம் சேலம். பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது சேலம் மாவட்டம். கருணாநிதி ஆட்சியில் சேலம் மாவட்டத்திற்கு அதிக திட்டங்கள் கிடைத்தன. சில ஆண்டு காலம் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி வாழ்ந்த இடம் சேலம்.

சேலத்திற்கு வந்தது என் வீட்டுக்கு வந்தது போன்ற பெருமை ஏற்படுகிறது. கூட்டு குடிநீர் திட்டம், பெரியார் பல்கலை. சேலம் உருக்காலை உள்ளிட்ட திட்டங்களை திமுக கொண்டுவந்தது. பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை திமுக ஆட்சியில் மீண்டும் தொடங்கியது.

சேலம் மாவட்டத்திற்கு ஏற்கனவே செய்த திட்டங்களை விட அதிகமானவற்றை நிறைவேற்ற உள்ளேன். மக்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 16 வட்டங்களில் உள்ள மக்களை சந்தித்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

ரூ.1,242 கோடி மதிப்பிலான திட்டங்களை சேலம் மாவட்டத்திற்கு அறிவிக்க உள்ளேன்.நானும் அமைச்சர்களும் செல்லும் இடமெல்லாம் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.

ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கை மேம்பாட்டையும் மனதில் வைத்து அரசு செயல்படுகிறது. சேலம் அம்மாபேட்டையில் ரூ.120 கோடியில் ரெயில்வே மேம்பாலம் நிறைவேற்றப்படும்.

ரூ.530 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டங்கள் நிறைவேற்றப்படும்.சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்படும்.சேலம் மாநகராட்சியில் உள்ள சாலைகள் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்.வறுமை குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் டைடல் பார்க் அமைக்கப்படும். மாவட்டங்களை பாகுபாட்டுடன் திமுக அரசு பார்க்காது. திட்டப்பணிகள் நடைபெற்று வரும் பகுதிக்கு நான் மீண்டும் மீண்டும் வருவேன். வறுமை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என்பதே நோக்கம். ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று கூறினார் மறைந்த முதல்வர் கருணாநிதி.

எந்த செயலை செய்தாலும் பிரம்மாண்ட வெற்றியை பெறக்கூடியவர் அமைச்சர் நேரு. சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக உள்ள நேரு, வந்தார் வென்றார் என்ற நிலை வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like