1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் லாட்டரி சீட்டு - அனுமதி வழங்கினார் முதல்வர்..!

மீண்டும் லாட்டரி சீட்டு - அனுமதி வழங்கினார் முதல்வர்..!


சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் லாட்டரி சீட்டு விற்பனை கொடிகட்டி பறந்தது. ஆரம்பத்தில், லாட்டரி சீட்டு விற்பனைக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். ஒவ்வொரு முறையும், நமக்கு பெரிய தொகை பரிசாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் லாட்டரி சீட்டுகளை வாங்கத் தொடங்கினர். சிலர், லாட்டரி சீட்டுகளை வாங்குவதையே தொழிலாகக் கொண்டிருந்தனர்.

இதனால் ஏழை, எளிய மக்கள் சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் லாட்டரி சீட்டுகளில் செலவிடத் தொடங்கினர். இதனால் அவர்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் வாழ்நாள் சேமிப்பை இழந்து தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாகினர். இந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து பல மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்தனர். தடையை மீறி லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. ஆனாலும் கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் லாட்டரி விற்பனை எவ்வித தடைகளும் இன்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாநில அரசின் வரி வருவாயை பெருக்கும் வகையில், தடை செய்யப்பட்டிருந்த லாட்டரி விற்பனைக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like