சோகத்தில் சென்னைவாசிகள்..! இது தான் உதயம் தியேட்டரின் கடைசி படமாம்..!

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக உதயம் திரையரங்கம் திகழ்கிறது. 1980 கால கட்டங்களில் தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம் இன்றளவும் வெற்றிகரமான திரையரங்காக வலம் வருகிறது. உதயம் தியேட்டர் தொடங்கப்பட்ட போதும், அதற்குப் பிறகும் தொடங்கப்பட்ட பல தியேட்டர்கள் மூடு விழா கண்டு கல்யாண மண்டபங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி இருக்கின்றன. ஆனால் 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையின் முக்கிய அடையாளமாக உதயம் திரையரங்கம் திகழ்கிறது.
படையப்பா, அருணாச்சலம், பாட்ஷா, காதல் மன்னன், போக்கிரி என பல வெற்றி படங்களை 100 நாட்களுக்கு மேல் ஓட வைத்தது தான் உதயம் திரையரங்கம். தொடர்ந்து டிஜிட்டல் யுகத்தில் மல்டிபிளக்ஸ் கலாச்சாரம் வந்த பிறகு உதயம் திரையரங்கின் ஓட்டம் குறைய தொடங்கியது.
இந்நிலையில். தமிழகத்தின் பிரபலமான கட்டுமான நிறுவனம் ஒன்று அந்த இடத்தை வாங்கி பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பை கட்டை இருப்பதாக தகவல் வெளியான நிலையில் உதயம் திரையரங்கில் ரசிகர்கள் கடும் சோகத்தில் மூழ்கினர். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு உதயம் திரையரங்கு குறித்த பதிவுகள் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்தது. இந்த நிலையில் 40 ஆண்டு கால சென்னையில் சினிமா கனவுகளை சுமந்திருந்த உதயம் அஸ்தமனம் ஆகப்போகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாகும் வேட்டையன் படம் தான் அந்த தியேட்டரில் கடைசியாக வெளிவர இருக்கும் திரைப்படம் என்று கூறுகின்றனர். அந்த படம் வெளியானதற்கு பிறகு தியேட்டர் இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.