சில்லென்று மாறிய சென்னை! இடியுடன் கூடிய கனமழை!!

சில்லென்று மாறிய சென்னை! இடியுடன் கூடிய கனமழை!!

சில்லென்று மாறிய சென்னை! இடியுடன் கூடிய கனமழை!!
X

சென்னையில் அதிகாலை முதல் இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் அதிகாலை முதல் சென்னையில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பாலவாக்கம், ஈ.சி.ஆர், திருவான்மியூர், விருகம்பாக்கம், அண்ணாநகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம், அமைந்தகரை, சேத்துப்பட்டு, வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. இதன் வெப்பமாக இருந்த சென்னை சில்லென்று மாறியது. பூவிருந்தவல்லி, ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், போரூர், திருமுல்லைவாயில், பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.


பெருங்களத்தூர், வண்டலூரில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மெரினா, சாந்தோம், மந்தைவெளி, மயிலாப்பூர், பெருங்குடி, கந்தன் சாவடி, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அடையாறு, அசோக் நகர், ஈசிஆர் சாலை, தி.நகர், மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மத்திய கைலாஷ், ஆலந்தூர், கிண்டி, கோடம்பாக்கம், வளசரவாக்கம்,  தாம்பரம், அனகாபுத்தூர், திருவேற்காடு, போரூர், ஆவடி, புழல், செங்குன்றம், திருவள்ளூர், மணவாள நகர், கடம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. 


இதனால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடுமையான காற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it