1. Home
  2. தமிழ்நாடு

சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் அறிவிப்பு..!

1

பொங்கல் பண்டிகை மட்டுமின்றி சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக செல்லும் பக்தர்கள் வசதிக்காகவும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுவென நடைபெற்று வருகிறது. ரயில் எண் 06151 கொண்ட சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) ஒருவழிப் பாதை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலானது இன்று (ஜனவரி 13) இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்படுகிறது.

நாளை பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இதில் ஏசி 3 டயர் பெட்டிகள் 2, ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் 2, ஜெனரல் செகண்ட் கிளாஸ் பெட்டிகள் 10, செகண்ட் கிளாஸ் பெட்டி 1, லக்கேஜ் & பிரேக் வேன் 1 ஆகிய பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ரயில் நிலையம் நின்று செல்லும் நேரம்
சென்னை எழும்பூர் 23.45 (திங்கள்)
தாம்பரம் 00.35
செங்கல்பட்டு 01.05
மேல்மருவத்தூர் 01.30
விழுப்புரம் 02.35
விருத்தாசலம் 03.30
அரியலூர் 04.08
ஸ்ரீரங்கம் 04.38
திருச்சி 05.05
திண்டுக்கல் 06.10
கொடைக்கானல் ரோடு 06.35
மதுரை 07.30
விருதுநகர் 08.25
சாத்தூர் 08.45
கோவில்பட்டி 09.03
திருநெல்வேலி 10.03
வள்ளியூர் 10.55
நாகர்கோவில் டவுன் 11.30
திருவனந்தபுரம் சென்ட்ரல் 12.40
திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) 14.00 (செவ்வாய்)

Trending News

Latest News

You May Like