திமுக, அதிமுகவுக்கு சவால்.. விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட முடிவு !!

திமுக, அதிமுகவுக்கு சவால்.. விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட முடிவு !!

திமுக, அதிமுகவுக்கு சவால்.. விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட முடிவு !!
X

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற பரபரப்பு நிலவும் நிலையில், இந்த வெற்றி அவர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.

மேலும் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து விஜய் வாழ்த்து கூறினார். எப்படி செயல்படனும் என அவர் அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

vijay mantram

ஈராேட்டில் மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுவது, மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு, கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து இடங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டால் அது திமுக, அதிமுகவுக்கு சவாலாக அமையும் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it