நாளை முதல் எதற்கெல்லாம் ஊரடங்கு தளர்வு !! யாருக்கெல்லாம் பயன் , லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு.

நாளை முதல் எதற்கெல்லாம் ஊரடங்கு தளர்வு !! யாருக்கெல்லாம் பயன் , லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு.

நாளை முதல் எதற்கெல்லாம் ஊரடங்கு தளர்வு !! யாருக்கெல்லாம் பயன் , லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு.
X

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 206 நாடுகளுக்கு மேல் பரவி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பாதிப்பு 14 ஆயிரம் கடந்து உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு 2 வது கட்டமாக மத்திய அரசு நீடித்தது.

அதில் வரும் 20 ம் தேதிக்கு பின்னர் , சில தளர்வுகள் இருக்கும் என தெரிவித்திருந்தது. பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் நாளை 20ம் தேதி முதல் ஊரடங்கு சில நிபந்தனைகளுடன் தளர்வு செய்யப்படுகிறது.

இதற்கான தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதனை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு ; 

1.ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும்.

2.வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி.

3.மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும்.

4.தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.

5.நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும்.

6.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும். இதில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

7.பொது வினியோகத்துறை செயல்படும்.

8.மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி.

9.ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்விக்கு அனுமதி.

10.அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யலாம்.

11.வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.

12.கட்டிட தொழில்கள் தொடர அனுமதி.

13.தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக இயக்கலாம்.

14.அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it