ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் என்று கூறிய செல்லூர் ராஜூ!

 | 

முதல்வர் ஈபிஎஸ் நன்றாக செயல்பட்டார் என்று கூறுவதற்கு பதிலாக முதல்வர் ஓபிஎஸ் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சிலும், செயலிலும் எப்போதும் அதிரடி காட்டக்கூடியவர். அப்படி காட்டப்படும் அதிரடி பல நேரம் சர்ச்சையாகவும், பேசு பொருளாகவும் மாறிவிடுவது உண்டு.

அந்த வகையில் திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ முதலமைச்சர் ஓபிஎஸ் என கூறியுள்ளார்.

கொரோனா காலத்திலும் முதலமைச்சர் ஓபிஎஸ் சிறப்பாக பணியாற்றினார் என கூறிவிட்டு பிறகு தடுமாறி, ஈபிஎஸ் என மாற்றி கூறினார்.

சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று முதலில் கூறியவர் செல்லூர் ராஜூ தான். இந்நிலையில் தற்போது அவர் ஓபிஎஸ் முதலமைச்சர் என்று கூறியிருப்பது பேசு பொருளாகியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP