திடீரென தலையில் மொட்டையடித்துக் கொண்ட பிரபல நடிகை !!

திடீரென தலையில் மொட்டையடித்துக் கொண்ட பிரபல நடிகை !!

திடீரென தலையில் மொட்டையடித்துக் கொண்ட பிரபல நடிகை !!
X

ஹிந்தி தொடர்களில் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவர் ஜெயா பட்டாச்சார்யா. பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் ஜெயா பட்டாச்சார்யா.

பொதுவாக சினிமா நடிகர், பிரபல சீரியல் நடிகையாக இருந்தாலும் உயர்ந்து வரும் வெப்பநிலை காரணமாக தனது கூந்தலை பராமரிக்க முடியவில்லை என தலையை மொட்டை அடித்துள்ளார் ஜெயா பட்டாச்சார்யா.

இதுபற்றி கூறியுள்ள அவர், மொட்டை அடிக்கவேண்டும் என்ற ஆசை பலவருடங்களாக இருந்தாலும், எனது குடும்பத்தினர் உட்பட பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மொட்டை அடிக்கவில்லை.

தற்போது மொட்டை அடித்துள்ளது தனக்கு மிகவும் சௌகரியமாக இருப்பதாக கூறும் அவர், புற்றுநோயாளிகளுக்கு தனது முடியை தானமாக கொடுப்பதற்காக அதை பத்திரமாக வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Newstm.in

Next Story
Share it