கொரோனா இருந்தும் மருத்துவமனையில் சீன் போடும் பிரபல நடிகை!

 | 

கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூரை சிகிச்சை அளித்துவரும் கடுமையாக எச்சரித்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகி கனிகா கபூர் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாகி திமன் கனிகா கபூரின் நடவடிக்கை மிக மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாக தெரிவித்த அவர், கனிகா நோயாளி போல் நடந்து கொள்ளாமல், சினிமா ஸ்டார் போல் நடந்து கொள்கிறார் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

கனிகா கபூருக்கு மருத்துவமனையின் சமையலறையிலிருந்து சாப்பாடு வழங்கப்படுகிறது. மேலும் டிவி, ஏசி போன்ற வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். சகல வசதிகள் செய்து கொடுத்தபோதும் அவர் குறைகூறி கொண்டிருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP