பேய் படத்தில் வருவது போன்ற பூனை… வைரலாகும் புகைப்படம்!

பேய் படத்தில் வருவது போன்ற பூனை… வைரலாகும் புகைப்படம்!

பேய் படத்தில் வருவது போன்ற பூனை… வைரலாகும் புகைப்படம்!
X

80களில் வெளிவந்த திகில் படங்களில் வரும் பூனை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்விழி இல்லாமல், உடலில் முடி இல்லாமல் இருக்கும் பூனையின் பெயர் ஜேஸ்பர். இந்த பூனைக்கு இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக்கில் ஏராளமான ஃபாலோவர்கள் இருக்கின்றனர்.ஜேஸ்பர் இரண்டு வயதாக இருக்கும்போது கெல்லி என்பவர் அதை எடுத்து வளர்த்தியிருக்கிறார்.

அப்போது நன்றாக இருந்த பூனையை சில வருடங்கள் கழித்து திடீரென ஃபெலைன் ஹெர்ப்ஸ் வைரஸ் தாக்கியது. மேலும் கண்களில் அல்சர் வரவே, சில மாதங்களில் நிலைமை மோசமாகி கண்களை எடுக்கவேண்டிய நிலை வந்துவிட்டது.

இந்த நிலையிலும் ஜேஸ்பரை பத்திரமாக கவனித்துக்கொள்வதற்காக கெல்லியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நோய் எப்படி தாக்கியது எனத் தெரியவில்லை. ஆனால் இதனால் ஜேஸ்பரின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

newstm.in

Next Story
Share it