செய்தியாளர் மீது சாதி வெறிக்கும்பல் கொடூர தாக்குதல்!

செய்தியாளர் மீது சாதி வெறிக்கும்பல் கொடூர தாக்குதல்!

செய்தியாளர் மீது சாதி வெறிக்கும்பல் கொடூர தாக்குதல்!
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் வெளிச்சம் தொலைக்காட்சியின் செய்தியாளர் சாதிவெறியோடு கொலைவெறிதாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதி.சுரேஷ். உளுந்தூர்பேட்டை பகுதி வெளிச்சம் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வருகிறார். உளுந்தண்டார்கோவில் பகுதியில் உள்ள பள்ளி சுற்றுச்சுவரில் வரையப்பட்டிருந்த புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவப் படத்தை சாதிவெறியர்கள் சிலர் அவமதித்ததாக கடந்த மாதம் வெளிச்சம்  தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி சாதி வெறியர்கள்  செய்தியாளர் சுரேஷை கொலை செய்து விடுவதாக  மிரட்டல் விடுத்தனர். 


இதுகுறித்து செய்தியாளர் சுரேஷ் அளித்த  புகாரை தொடர்ந்து பெயர் அளவுக்கு 10க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் அதன் பின்னர் அவர்களை விடுவித்தனர். இந்நிலையில், பணி முடிந்து உளுந்தூர்பேட்டையில் இருந்து செம்மநங்கூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த செய்தியாளர் சுரேஷை வழி மறித்த மதிமுக மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் சத்யா தலைமையிலான சாதிவெறி கும்பல் அரிவாள், இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு சுரேஷை சரமாரியாக தாக்கினர். இதில் ஆதி சுரேஷ் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். 


தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து சுரேஷ் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்தியாளர் ஆதி சுரேஷ் மீது சாதிய வன்மத்தோடு கொலை வெறி தாக்குதல் நடத்திய மதிமுக மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் சத்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். செய்தியாளர் ஆதி.சுரேஷ் மீதான கொலை வெறி தாக்குதலுக்கு உளுந்தூர்பேட்டை பாமக முன்னாள் நகர செயலாளர் பாலாஜி தான் காரணம் என்றும், பாலாஜி மற்றும் சாதிவெறிகும்பலை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it