கார்ட்டூன் உலகம் - டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் ஜீன் டெய்ச் மரணம்.!

கார்ட்டூன் உலகம் - டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் ஜீன் டெய்ச் மரணம்.!

கார்ட்டூன் உலகம் - டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் ஜீன் டெய்ச் மரணம்.!
X

உலகம் முழுவதும் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ள ‘டாம் அண்ட் ஜெர்ரி’ கார்ட்டூன் தொடர்களின் இயக்குநர் ஜீன் டெய்ச்  உயிரிழந்தார். அவருக்கு வயது 95.

குட்டி எலியின் சேட்டைகளும், அதைத் துரத்தி விளையாடும் பூனையின் வேடிக்கைகளும் நிறைந்த ‘டாம் அண்ட் ஜெர்ரி’ கதைகளுக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் இருக்கின்றனர். வயது வித்தியாசமே இல்லாமல் அனைவரையும் விரும்பி ரசிக்க வைத்த இந்த கார்ட்டூன் தொடர் 1940ஆம் ஆண்டு வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசஃப் பார்பெரா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.
  
1940 முதல் 1958ஆம் ஆண்டு வரை இவர்கள் இருவரும் இணைந்து ‘டாம் அண்ட் ஜெர்ரி’ தொடரை எழுதி, இயக்கி வந்தனர். அவர்களைத் தொடர்ந்து ‘டாம் அண்ட் ஜெர்ரி’ கதைகளை இயக்கியவர் தான் ஜீன் டெய்ச். இவர் தனது ஆரம்பக் காலத்தில் ராணுவ வீரராகவும், அதைத் தொடர்ந்து வட அமெரிக்காவில் விமானியாகவும் பணியாற்றி வந்தார். 

ண்டு உடல்நலக்குறைவால் வேலையிலிருந்து விலகிய ஜீன் டெய்ச், கார்ட்டூன் சித்திரங்களை வரைய தொடங்கினார். கார்ட்டூன் ஓவியங்கள், கதைகள், தொடர்கள் எனத் தனது சிறப்பான படைப்புகளுக்காக ஆஸ்கர் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
 

1960 ஆண்டின் தொடக்கத்தில் இவரது எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியான ‘டாம் அண்ட் ஜெர்ரி’ மற்றும் ‘பாப்பாய்’ கார்ட்டூன் தொடர்கள் உலகம் முழுவதும் ஏராளமான மக்களை ரசிக்க வைத்தது. டாம் அண்ட் ஜெர்ரி தொடரில் 13 கதைகள் இவரது இயக்கத்தில் வெளிவந்தன. ‘சத்தான கீரை உண்டால் சக்தி கிடைக்கும்’ என்ற கருத்தைச் சிறு குழந்தைகளின் ஆழ்மனத்தில் பதிய வைத்த ‘பாப்பாய்’ தொடரிலும் சில பகுதிகளை இவர் இயக்கியுள்ளார்.

வயது முதிர்ச்சி காரணமான உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த 16ஆம் தேதி ப்ராக் நாட்டில் அமைந்துள்ள தனது சொந்த வீட்டில் வைத்து மரணமடைந்தார். ’மன்றோ’ என்னும் பிரபல கார்ட்டூன் குறும்படத்திற்காக ஜீன் டெய்ச் ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணத்துக்குப் பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in 

Next Story
Share it