1. Home
  2. தமிழ்நாடு

கவர்ச்சி நடிகை மீது கார் ஓட்டுநர் பரபரப்பு புகார்.. மீண்டும் அதிரும் திரையுலகம்

கவர்ச்சி நடிகை மீது கார் ஓட்டுநர் பரபரப்பு புகார்.. மீண்டும் அதிரும் திரையுலகம்


மும்பையைச் சேர்ந்த நடிகை முமைத்கான். இவர் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஒருசில படங்களில் கவர்ச்சி நடனத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

தமிழில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் வரும் குத்து பாடல்களுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர்.

இந்நிலையில் முமைத்கான் மீது வாடகை கார் ஓட்டுநர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். அதாவது தனக்குத் தர வேண்டிய ரூ.15,000 தராமல் ஏமாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கார் ஓட்டுநர் ராஜூ என்பவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அண்மையில் முமைத்கான் 3 நாள் பயணமாக கோவா செல்ல கார் புக் செய்ததாகவும், ஆனால் 8 நாட்கள் கோவாவில் தங்கியதாகவும் கூறியுள்ளார். பின்னர் தனக்குத் தரவேண்டிய ரூ.15,000 தரவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.

இதற்கான ரசீது ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் ஓட்டுநர் தெரிவித்தார். மேலும் தன்னைப்போல் மற்றொரு ஓட்டுநர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இதை வெளியில் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

newstm.in


Trending News

Latest News

You May Like