கொரோனா உடல்களை அடக்கம் செய்ய இடம் கொடுத்த கேப்டன்!

கொரோனா உடல்களை அடக்கம் செய்ய இடம் கொடுத்த கேப்டன்!

கொரோனா உடல்களை அடக்கம் செய்ய இடம் கொடுத்த கேப்டன்!
X

கொரானாவல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியில் இடம் தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல ஊர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால்,  ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 

கொரோனாவால் பாதிக்கபட்டவரின் உடலை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்கு தமிழக அரசு புரிய வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  கடவுளுக்கு அடுத்தப்படியாக நாம் கருதும் மருத்துவர்களுக்கு இந்நிலை என்பது மனதிற்கு வேதனையளிக்கிறது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

newstm.in

Next Story
Share it