1. Home
  2. தமிழ்நாடு

கடையில் எதையும் திருட முடியவில்லை.. ஆத்திரத்தில் முதியவர் செய்த காரியம் !

கடையில் எதையும் திருட முடியவில்லை.. ஆத்திரத்தில் முதியவர் செய்த காரியம் !


கடை ஒன்றில் திருட முடியாத ஆத்திரத்தில் முதியவர் ஒருவர் இறுதியில் சிசிடிவி கேமராவை கழட்டிச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் பர்மா பஜாரில் அசார் என்பவர் செல்போன் விற்பனை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். 

இவர் வழக்கம்போல் இரவு 8 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பி உள்ளார். மீண்டும் காலை 10 மணி அளவில் கடை திறக்க சென்றபோது, கடைக்கு வெளியே இருந்த 2 சிசிடிவி கேமராவில் ஒன்றை காணவில்லை.

கடையில் எதையும் திருட முடியவில்லை.. ஆத்திரத்தில் முதியவர் செய்த காரியம் !

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பதறிப்போய் கடையில் உள்ள பொருட்களை சரிபார்த்தப்போது உள்ளே எதுவும் திருடப்படவில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டார்.

இதையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பரிசோதித்து பார்த்துள்ளார். அதில் முதியவரான ஒருவர், தொப்பி அணிந்தபடி கடையை திறக்க முயன்றுள்ளார்.

ஆனால் கடை திறக்க முடியவில்லை. இதையடுத்து இறுதியாக அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை அவர் கழட்டிச் சென்றுள்ளார்.

தான் திருட முயன்றதை சிசிடிவி கேமரா காட்டிக்கொடுத்துவிடுமோ என்ற நோக்கத்தில் அவர் அதை திருடிச் சென்றாரா ? அல்லது இந்த சிசிடிவி கேமராவையாவது திருடிச் சென்று விற்கலாம் என்று கழட்டிச் சென்றாரா ? என்பது அவரை கைது செய்தால் மட்டுமே தெரியவரும்.

இதுதொடர்பாக கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், தஞ்சை கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

newstm.in 

Trending News

Latest News

You May Like