போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் அரசின் உத்தரவில் தலையிட முடியாது !! நீதிமன்றம்...

போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் அரசின் உத்தரவில் தலையிட முடியாது !! நீதிமன்றம்...

போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் அரசின் உத்தரவில் தலையிட முடியாது !! நீதிமன்றம்...
X

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் வசித்து வந்தார். அவரது மறைவிற்கு பிறகு, அவர் வாழ்ந்து வந்த வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

ஆனால், அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போயஸ் கார்டன் கஸ்தூரி எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக்க மாற்ற தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அரசின் உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Newstm.in

Next Story
Share it