பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல !! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பிய நபர்.

பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல !! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பிய நபர்.

பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல !! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பிய நபர்.
X

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. இதனால் ஆண்களும் , பெண்களும் பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது , அதில் ;

ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் இருக்கும் ஆண்களை, குடும்ப வன்முறை விவகாரம் உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் ஆட்டிப்படைத்து வருகிறது. ஆண்களின் நிலை மிக பரிதாபமாக உள்ளது. சட்டங்களை காட்டி, பல ஆண்களை அவர்களது மனைவிகள் மிரட்டுகின்றனர். அடிமைப்படுத்தப்படுகின்றனர்.

பலர் மனதளவில் மனைவிகளால் கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர். நிராயுதபாணியாக உள்ள ஆண்கள் புகார் கொடுக்க முடியாமலும், வெளியில் சொல்லமுடியாத இன்னல்களையும் அனுபவித்து வருகின்றனர். எனவே கொரோனா எனும் கொடும் வைரசைவிட, குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படும் ஆண்களை பாதுகாக்க வேண்டும்.

குறைந்தபட்சம் ஆண்களின் பிரச்னைகளை தெரிவிக்க, ஒரு ஹெல்ப் லைன் சேவையை அரசு உடனடியாக தொடங்கவேண்டும். ஆண்கள் ஆணையமும் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் டி.அருள்துமிலன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it