புற்றுநோய் பற்றிய ஒட்டிய விழிப்புணர்வு போஸ்டரால் எழுந்த சர்ச்சை..!
ஆண்டுதோறும் ஒவ்வொரு அக்டோபர் மாதமும் சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அதனால், அக்டோபர் மாதம் 'பிங்க் அக்டோபர்'ஆக (Pink October) கடைபிடிக்கப்படுகிறது.
தற்போது 20 வயது முதல் 55 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. பெண்கள் அதிக அளவு துரித உணவுகள் உட்கொள்வதாலும், 12 வயதிற்கு முன்பே பெண்கள் பூப்படைவதாலும், புகைப்பிடித்தல், மது குடித்தல், உடல் பருமன் அதிகரிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறது.
"25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பகத்தை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.அதே நேரத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயமாக மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 54 வயதிற்கான மேற்பட்ட பெண்களுக்கு தொடர்ந்து மாதவிடாய் ஏற்பட்டால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் வரும் என்பதால் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயிலில், மார்பக புற்றுநோய் பற்றிய ஒட்டிய விழிப்புணர்வு போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது.
சமூக நலனுக்காக ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வுகளில், மார்பகங்கள் என குறிப்பிடுவதில் என்ன தவறு? என சமூக ஆர்வலர்கள் காட்டமான விமர்சனம். யுவராஜ் சிங்கின் #YouWeCan அறக்கட்டளை வைத்த விளம்பர போஸ்டர், மக்களின் எதிர்ப்பால் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது.