#BREAKING : தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு..!
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 17-ம் தேதி நடைபெறும் விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குகிறார்
அதே போல் மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.