#BREAKING : பிப்.26 ம் தேதி தவெக பொதுக்குழு கூட்டம்!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2ஆம் தேதியுடன் ஒரு ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ளது.
கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்து வருகிறார்.
அடுத்ததாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகம் அமைப்பது தொடர்பான பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், வரும் 26ம் தேதி தவெக ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை உறுதி செய்துள்ளது. இக்கூட்டம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கன்புளுயன்ஸ் கன்வென்சன் சென்டரில் நடைபெற உள்ளது.