1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ரயிலில் இருந்து தள்ளிவிட்டப்பட்ட கர்ப்பிணியின் முழு மருத்துவ செலவை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Q

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெமினி (41). இவரது மனைவி ரேவதி (36). இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். ரேவதி கர்ப்பிணியாக இருப்பதால் மருத்துவ பரிசோதனைக்காக தனது தாயார் வீடான சித்தூர் மாவட்டத்துக்கு செல்வதற்காக கோவையில் இருந்து காட்பாடி வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பொது வகுப்பு பெட்டியில் வியாழக்கிழமை காலை புறப்பட்டார்.

இந்த ரயில் பகல் 12 மணியளவில் வேலூர் மாவட்டம், காவனூர் - விரிஞ்சிபுரம் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, பெண்கள் பெட்டியில் தனியாக பயணித்த ரேவதியிடம் அதே பெட்டியில் இருந்த ஆண் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரேவதியின் கையை முறுக்கி ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவரை இருப்புப்பாதை பராமரிப்பு பணியில் இருந்த கேங்க்மேன் ஒருவர் அருகில் இருந்த வீட்டில் வசித்த பொதுமக்கள் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். மேலும், அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதுதொடர்பான தகவலின் பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததுடன் அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியதாக வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் (30) என்பவரை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கைது செய்தனர்

பாதிக்கப்பட்ட ரேவதிக்கு ரூ.50 ஆயிரம் கருணை தொகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் வழங்கினர்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக, அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பாதுகாப்பான ரயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கர்ப்பிணியின் முழு மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

மேலும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு காயமடைந்த கர்ப்பிணியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மற்றும் ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிக்கு உயர் சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவு அளித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like