#BREAKING: தடையை மீறி போராட்டம் - சௌமியா அன்புமணி கைது..!
பாமக மகளிர் அணி சார்பில் பசுமைத்தாயகம் சௌமியா அன்புமணி தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில், காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று பாமக தலைமை கூறியிருப்பதாகவும், இதனால் பரபரப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் பாமக மகளிர் அணியினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று (ஜன., 02) தடையை மீறி பாமக மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார் சௌமியா உள்ளிட்டோரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கொண்டு சென்றனர்.