1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : வானில் வட்டமடித்த 2 விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன..!

1

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்மழை பெய்து வருவதால், கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பி வருகின்றன. நேற்று முன்தினம் மதுரை மாவட்டத்தில் அடுத்தடுத்து மாலையிலும், இரவிலும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் ஓடி, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. 

 

இன்றும் மதுரையில் மாலை முதல் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. தொடர் கனமழை மற்றும் வானிலை மோசமடைந்துள்ளதால் விமானம் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது 

 

சென்னையில் இருந்து மதுரை சென்ற விமானமும், பெங்களுருவில் இருந்து மதுரை சென்ற விமானமும் தரை இறங்க முடியாமல் இருப்பதாகவும் வானில் அரை மணி நேரமாக வட்டமடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் 2 விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன.

மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வெகு நேரமாக வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த 2 விமானங்களும் (சென்னை - மதுரை, பெங்களூரு - மதுரை) பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி.

null


 

Trending News

Latest News

You May Like