#BREAKING : பொள்ளாச்சி சம்பவம்: ரூ.25 லட்சம் அறிவித்த முதல்வர்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 25 லட்சம் கூடுதல் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகை ரூ.85 லட்சத்திற்கும் கூடுதலாக ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் வழங்க உத்தரவு..
2019ம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நேற்று (மே 13) தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தம் ரூ.85 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.