1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING பிறந்த நாளில் உயிரிழந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன்!

#BREAKING பிறந்த நாளில் உயிரிழந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன்!


ஜெ.அன்பழகன் தனது 62 பிறந்த நாளான இன்று கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் 1958ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதி பிறந்தார். 2001 சட்டமன்ற தேர்தலில் தியாகராய நகர் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 2011 மற்றும் 2016ஆகிய தேர்தல்களில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நம்பிக்கைக்கு உரிய நபராக திகழ்ந்த ஜெ.அன்பழகன் கட்சிப்பணிகளை சிறப்பாக செய்து முடிப்பவர் என்ற நற்பெயரைப் பெற்றவர். இன்று அவருக்கு 62ஆவது பிறந்த நாள். ஆனால் அந்த பிறந்த நாள் தினத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டாம் ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த அவர் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி உயிரிழந்துள்ளார்.  

#BREAKING பிறந்த நாளில் உயிரிழந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன்!

newstm.in

Trending News

Latest News

You May Like