1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பெரும் சோகம்..! ஜம்மு காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 36 பேர் பலி..!

1

ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டத்தில் பகிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்ற பேருந்து ட்ருங்கல்-அசார் அருகே சாலையில் இருந்து சறுக்கி 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த 55 பேரில் 36 போ் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது   

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மீட்புப் பணியின் போது சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன் இழப்பீடும் அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் நடந்த விபத்து வேதனை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.


 

Trending News

Latest News

You May Like