BREAKING! இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்க அனுமதி கிடையாது !!

 | 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்திற்கு சென்று அச்சுறுத்தி வந்தது. பின்னர் ஊரடங்கு விதிக்கப்பட்டதாலும் தீவிர நடவடிக்கையின் காரணமாகவும் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதில் 2 வாரங்கள் தளவுகள் இல்லாத முழு ஊரடங்கும் அடங்கும்.இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை , மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுபாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்க அனுமதி இல்லை.

மேற்கண்ட மாவட்டங்களை தவிர இதர 27 மாவட்டங்களில் ஜூன் 14 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட தமிழ் நாடு அரசு அனுமதி
 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP