காதலன் கொலை.. பிரசவத்திற்கு சென்ற மருத்துவமனையில் போலீஸிடம் இருந்து தப்பிய கர்ப்பிணி..

காதலன் கொலை.. பிரசவத்திற்கு சென்ற மருத்துவமனையில் போலீஸிடம் இருந்து தப்பிய கர்ப்பிணி..

காதலன் கொலை.. பிரசவத்திற்கு சென்ற மருத்துவமனையில் போலீஸிடம் இருந்து தப்பிய கர்ப்பிணி..
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி கிருஷ்ணவேணி(35). இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கிருஷ்ணவேணியின் முன்னாள் கணவர் அவர்களுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கடந்த ஜனவரி மாதம் தனது  முன்னாள் காதலனை அப்பெண் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நேரத்தில் அவர் கர்ப்பமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து ஆரணி நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி குண்டர் சட்டத்தின் கீழ் கிருஷ்ணவேணியை கடந்த 4ஆம் தேதி கைது செய்து 7ஆம் தேதி விசாரணை கைதியாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கர்ப்பிணியான கிருஷ்ணவேணி பிரசவ பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சையில் இருந்த கிருஷ்ணவேணி இன்று காலை தனது சிறை புடவையை மாற்றிக்கொண்டு திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார்.

இது குறித்து தகவல் அறித்த சிறை துறை அளித்த புகாரின் பேரில், வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பியோடிய பெண் விசாரணை கைதியை தேடி வருகின்றனர். 

newstm.in 

Next Story
Share it