1. Home
  2. தமிழ்நாடு

4 வயது சிறுவனுடன் ரயிலில் ஏறிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி - ரயில்வே மீது குழந்தையின் தாய் பகீர் குற்றச்சாட்டு!

1

நம்மில் பலர் ஊருக்கு பயணம் சென்றால் முதலில் நினைவிற்கு வருவது ரயில் பயணம் தான். அதற்கு முக்கிய காரணம்  வசதியான, பாதுகாப்பான, செலவு குறைவான பயணம் என்பதற்காக தான். 

இன்றளவும் மக்களின் நம்பிக்கையாக இருக்கும் இந்த ரயில் பயணம்  சமீபகாலங்களில் அந்த நம்பிக்கையை  தகர்ந்துகொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம். ரயில் விபத்துகள் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. எங்கோ நடக்கும் ரயில் விபத்துகளைச் செய்தியாகப் படித்துக்கொண்டிருந்த தமிழக மக்களுக்கு, சென்னை அருகில் கவரப்பேட்டையில் நடந்த விபத்து பேரதிர்ச்சி.

இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்ட விரைவு ரயிலில் நடந்த சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதாவது 4 வயது சிறுவனுடன் பயணித்த தாய் வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தில் ஏறினார். அவர்களுக்கு அப்பர் பெர்த் கொடுக்கப்பட்டுள்ளது.இவர்களால் குழந்தையுடன் ஏற முடியாது என்ற காரணத்தால் எதிர் பக்கம் இருந்த காலி சீட் அதாவது மிடில் பெர்த் படுக்க தயாரானார்கள். குழந்தையை லோயர் பெர்த்தில் படுக்க வைத்து படுக்கையை தயார் செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு கொக்கிகளும் கழுந்து (UPPER BERTH) கீழே விழுந்ததில் 4 வயது சிறுவன் ஜெய்சன் தாமஸ் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து பேசிய தாய் இது குறித்து பேசிய தாய் புவிதா, டிக்கெட் பரிசோதகர் உடனே வந்தார். அடுத்த ரயில் நிலையம் (கோவில்பட்டி) உங்களுக்கு உதவ டாக்டர் அல்லது நர்ஸ் வருவார்கள் என்று கூறினார் ஆனால் வந்ததோ கம்பவுண்டர். 

மேலும் மதுரை ரயில் நிலையத்தில் ஆம்புலன்ஸ் வரும் என நினைத்த தாய்க்கு ஏமாற்றமே மிஞ்சியது காரணம் அங்கே யாருமே வரவில்லை. இறுதியில் அங்க இருந்த போலீஸ் உதவியுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்த்துள்ளார் அந்த தாய்.

அவர் கண்ணீர்விட்டு பேசியது பார்ப்போரை கலங்கடித்தது. ஒரு பெண்மணி 4 வயது அடிபட்ட குழந்தையுடன் இரவு 1:30 மணிக்கு ரயில் நிலையத்தில் இறங்கினால் இப்படி தான் நடந்து கொள்வீர்களா..? ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்க கூட ஆள் இல்லை..? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.        

நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் காரணமாக அக்குறிப்பிட்ட ரயில் பெட்டியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதிர்ஷ்டவசமாக மோசமான காயம் ஏற்படாமல் சிறுவன் உயிர் பிழைத்தார். 

 

Trending News

Latest News

You May Like