போனமுறை விஜய் சேதுபதி... இந்த முறை கமல் உடன் உரையாட போவது யார் தெரியுமா?

போனமுறை விஜய் சேதுபதி... இந்த முறை கமல் உடன் உரையாட போவது யார் தெரியுமா?

போனமுறை விஜய் சேதுபதி... இந்த முறை கமல் உடன் உரையாட போவது யார் தெரியுமா?
X

தலைவன் இருக்கின்றான் டைட்டிலில், சினிமா பையன் அபிஷேக் ஒருங்கிணைத்த இன்ஸ்டாகிராம் லைவ் நிகழ்ச்சியில், விஜய்சேதுபதி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நடிகர் கமல்ஹாசன் அற்புதமாக பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி இணையத்தில் பயங்கர ஹிட் ஆனது. ரசிகர்கள் பலரும் பெரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில், இதன் அடுத்த முயற்சியாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், கமல் கலந்து கொள்ளும் லைவ் பேட்டி இந்த முறை இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கிலும் நடைபெற உள்ளது. 


நாளை மாலை 5 மணிக்கு இன்ஸ்டாகிராம் லைவ்வில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து உரையாடும் லைவ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. டர்மெரிக் மீடியா, ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சினிமா பையன் அபிஷேக் ராஜா இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்குகின்றனர்.

newstm.in

Next Story
Share it