என்.எல்.சி 2 - வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் பயங்கர தீ விபத்து !! 10 பேர் காயம் !! 5 பேர் உயிரிழப்பு

 | 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

2 ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் இறங்கினர். ஏப்ரல் 8ம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்தின் நினைவு மறைவதற்குள் மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தற்போது 10 - க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP