நள்ளிரவு பரபரப்பு... நடிகர் விஜய்யின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நள்ளிரவு பரபரப்பு... நடிகர் விஜய்யின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நள்ளிரவு பரபரப்பு... நடிகர் விஜய்யின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
X

நடிகர் விஜய்யின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து நள்ளிரவில் போலீஸார் சோதனை நடத்தினர்.

சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய்க்கு சொந்தமாக வீடு உள்ளது. விஜய் பனையூரில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு காவல் துறை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு ஒருவர் பேசியுள்ளார். அந்த நபர் சாலிகிராமத்தில் உள்ள விஜயின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் விஜய் வீட்டுக்கு சென்று அங்கு சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் விழுப்புரத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். 

newstm.in

Next Story
Share it