கருப்பர் கூட்டம் !! 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

கருப்பர் கூட்டம் !! 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

கருப்பர் கூட்டம் !! 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
X

சென்னையில் கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து ஒரு பதிவு வெளியானது. அந்த பதிவு இந்து மத மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக சர்ச்சை எழ பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புகாரை தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 16ம் தேதி கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அவரை போலீசார் விசாரணைக்காக தமிழகம் அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில், இ பாஸ் இன்றி புதுச்சேரிக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

புதுச்சேரி அரியாங்குப்பம் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். இதுதவிர முகக்கவசம் அணியாமல் இருந்தது உள்பட 3 பிரிவுகளில் சுரேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Newstm.in

Next Story
Share it