கருப்பர் கூட்டம் யூ - டியூப் சேனலுக்கு தடை ?

கருப்பர் கூட்டம் யூ - டியூப் சேனலுக்கு தடை ?

கருப்பர் கூட்டம் யூ - டியூப் சேனலுக்கு தடை ?
X

இந்துக்களின் கடவுள்கள் மற்றும் புராண கதைகளை ஆபாசமாக பேசியும், ஆபாசமாக சித்தரித்து தொடர்ந்து பதிவிட்டு, அடுத்தடுத்து சர்ச்சைகளை உருவாக்கிய யூடியூப் சேனல் கருப்பர் கூட்டம். இந்த சேனல், அண்மையில் தமிழ் கடவுளான முருகனின் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டது.

இதற்கு இந்து அமைப்பினர் மற்றும் கடவுள் பக்தி கொண்டவர்களிடையே இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வந்தது.

இதையடுத்து, புகாரின் அடிப்படையில் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 30ம் தேதி இருவரையும் காவலில் எடுத்து விசாரித்து வரும் சென்னை சைபர் கிரைம் போலீசார், இந்து புராணங்களை ஆபாசமாக சித்தரித்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்துக்களின் புராணங்களை தொடர்ந்து ஆபாசமாக சித்தரித்து வரும் கறுப்பர் கூட்டம் சேனலை முடக்க சென்னை சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

Newstm.in

Next Story
Share it