பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனின் பேனர் கிழிப்பு!

 | 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வைக்கப்பட்டிருந்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனின் பேனர் கிழக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக நான்கு பொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் களம் கண்ட பாஜக நாகர்கோவில், மொடக்குறிச்சி, கோவை தெற்கு, நெல்லை ஆகிய நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தோல்வியை தழுவியுள்ளார். திமுக வேட்பாளர் கயல்விழி அவரைவிட ஆயிரத்து 393 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எல்.முருகன் சார்பில் தாராபுரம் தொகுதியில் பேனர் வைக்கப்பட்டது. அந்த பேனரை மர்ம நபர்கள் சிலர் கிழித்து உள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர் .

எல்.முருகனுக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர் அருகிலேயே திமுகவினர் நன்றி பேனரும் வைக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP