1. Home
  2. தமிழ்நாடு

"வெற்றிவேல் யாத்திரை"-க்கு நாள் குறித்த பாஜக !



பாஜகவின் "வெற்றிவேல் யாத்திரை"-க்கு நாள் குறிக்கப்பட்டுள்ளதால், ஆளும் கட்சியான அதிமுக முதல் எதிர் கட்சியான திமுக வரை எல்லா கட்சிகளும் ஆடிப்போய் உள்ளன.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் பாஜக பலப்படுத்தும் வகையில், "வெற்றிவேல் யாத்திரை" நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளில் அந்தஅந்த மாவட்ட பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக முதல்வரை அண்மையில் சந்தித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இந்த யாத்திரைக்கு, அனுமதி கோரி கோரிக்கையும் வைத்துவிட்டாராம்.

"வெற்றிவேல் யாத்திரை"-க்கு நாள் குறித்த பாஜக !

இது தொடர்பாக, தமிழக டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்த பாஜகவினர், தற்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களிலும் யாத்திரைக்கு அனுமதி கோரி மனு கொடுத்து வருகிறார்களாம்.

அனுமதித்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, வரும் நவம்பர் 6-ம் தேதி வெற்றிவேல் யாத்திரை திருத்தணியில் துவங்கி, டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் முடிக்க உள்ளார்களாம்.

ஆக தமிழகத்தில் பாஜக ஆட்டம் ஆரம்பம்.....!

Trending News

Latest News

You May Like