1. Home
  2. தமிழ்நாடு

தமிழ் பாடகியை கரம் பிடிக்கிறார் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா..!

1

பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, சென்னையைச் சேர்ந்த பாடகரும் பரதநாட்டியக் கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தை திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. 2025 மார்ச் 4ஆம் தேதி பெங்களூரில் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் திருமணம் குறித்து தேஜஸ்வி சூர்யாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் மற்றும் பரதநாட்டிய கலைஞர் ஆவார். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பயோ இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்திலும், சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் சமஸ்கிருதத்திலும் முதுகலை பட்டங்கள் பெற்றார். சைக்கிள் ஓட்டுதல், மலையேற்றம் மற்றும் நடைப்பயிற்சி ஆகியவற்றிலும் பெரும் விருப்பம் கொண்டவர்.

சிவஸ்ரீ இசை மற்றும் நாட்டியத் துறையில் குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். அவரது யூடியூப் சேனலில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை பிந்தொடர்ந்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கன்னட பதிப்பில் சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் பாடியுள்ளார்.

சினிமா, அரசியல் வட்டாரங்களில் தேஜஸ்வி சூர்யா, சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் திருமணம் பற்றி பேச்சுகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இருவரது குடும்பத்தினரும் திருமண ஏற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like