கேரளா வயநாடு இடைத்தேர்தல் - பாஜக வேட்பாளர் அறிவிப்பு!
வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதியில் நவ.13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி களம் இறங்குகிறார்.
அவரை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு நிறுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.