1. Home
  2. தமிழ்நாடு

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கசப்பு மற்றும் புளிப்பு உணவுகள்..!

1

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 10 கசப்பு மற்றும் புளிப்பு உணவுகள்பற்றி இங்கே பார்க்கலாம்.

அறுசுவையில் இரு சுவைகளான கசப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட உணவுகள், முழு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அறுசுவையை தினமும் எடுத்துக் கொள்ளாதவர்கள் ஆரோக்கிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று  கூறப்படுகிறது.

தொன்றுதொட்டு தமிழர் பாரம்பரியம் கற்றுத்தந்த பாடத்தால், ஆரம்பத்தில் இருந்தே தமிழ் மக்கள் அறுசுவைகளையும் தினசரி உணவில் சேர்த்து வருகின்றனர்.

இந்த அறுசுவை உணவு, உடலைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. அறுசுவையில், ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு பண்புகள் உள்ளன. அந்த வைகயில், நாம் இப்போது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கசப்பு மற்றும் புளிப்பு சுவை நலன்குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

நமது நாவானது அனைத்து விதமான சுவைகளையும் சுவைக்க வேண்டும். இது உடலில் ஆற்றல் மட்டம் முதல் மூளையின் செயல்பாடுவரை அத்தியாவசிய வேலைகளை நிர்வகிக்க உதவுகிறது.

எலுமிச்சை, ஆப்பிள் சைடர் வினிகர், கேல், கிம்ச்சி, திராட்சை, நெல்லிக்காய், மாதுளை, பாகற்காய், அருகம்புல் மற்றும் புளி போன்ற பொருட்களை உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்ற பண்புகளைப் பெறுவதோடு, செரிமானமும் மேம்படுகிறது. அதேநேரத்தில், இந்த இரு சுவைகள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.

பொதுவாக, உடலுக்குத் தேவையான ஆற்றல்களை வழங்கும் ஆரோக்கியமான உணவுகளைப் பெரும்பாலானோர் எடுத்துக் கொள்வதில்லை. மாறாக, உடனடி தயார் செய்யப்படும் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு அடிமையாகிறார்கள். இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என்று ஆரோக்கிய நிபுணர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

பெரும்பாலானோர் கசப்பான மற்றும் புளிப்பான உணவுகளைத் தவிர்க்கின்றனர். இந்தச் சுவைகள் சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்தத் தனித்துவமான சுவைகளைச் சுவைத்துப் பார்ப்பது உண்மையில் உங்கள் நல்வாழ்வை மேம்படுத்த உதவுகிறது.

இந்த உணவுகளில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்திருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

எலுமிச்சை:

எலுமிச்சையில் சுமார் 35 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. இது உங்கள் தினசரி உணவில் தேவைப்படும் வைட்டமின் சி-ன் பாதி அளவாகும். வைட்டமின் சி ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.

இது செல் சேதத்தைத் தடுக்கிறது. வைட்டமின் சி உங்கள் சருமத்திற்கு கொலாஜனை உருவாக்க உதவுகிறது மற்றும் உடல் இரும்புச் சத்தை உறிஞ்ச உதவுகிறது. அத்துடன் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் மேம்படுத்துகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர்:

 அமிலத்தன்மை கொண்ட ஆப்பிள் சைடர் வினிகர், செரிமானத்தை மேம்படுத்த உதவுவதோடு, ரத்த சர்க்கரையையும் சீராக்குகிறது.

பரட்டைக்கீரை:

முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த இந்தப் பரட்டைக்கீரை இரும்பு, வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது.

கிம்ச்சி:

கிம்ச்சி ஒரு புளிப்பு மற்றும் காரமான கொரிய உணவாகும். இது ஆரோக்கியமான குடல் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பராமரிக்க உதவும் புரோபயாடிக்குகளால் நிரம்பியுள்ளன. கிம்ச்சியில் இருக்கும் ப்ரீபயாடிக்குகள் நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாவை வளர்க்கின்றன. அத்துடன், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.

திராட்சை:

திராட்சை ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் உயிர்வேதியியல் கலவைகள் உள்ளன. குறிப்பாக இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

நெல்லிக்காய்:

நெல்லிக்காய் அதன் புளிப்பு மற்றும் கசப்பான சுவைக்காக அறியப்படுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் நார்ச்சத்து, குடல் இயக்கத்தைச் சீராக்க உதவுகிறது மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற நிலைகளிலிருந்து மீண்டு வர உதவுகிறது. நெல்லிக்காயில் அதிகளவில் இருக்கும் வைட்டமின் சி, உடல் மற்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இது முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மாதுளை:

மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டவை.எனவே இது உங்களது ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. மாதுளை மூளை அழற்சி எதிர்ப்பு விளைவுகளை உருவாக்குகிறது.இது அல்சைமர் நோயின் முன்னேற்றத்தைத் தடுக்க உதவும் என்று ஆரம்ப ஆய்வுகள் காட்டுகின்றன.தினமும் 8 மூடி மாதுளை சாற்றை குடிப்பது கற்றல் மற்றும் நினைவாற்றல் தொடர்பான செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது என்று கூறப்படுகிறது.

பாகற்காய்:

கசப்பு சுவை கொண்ட பாகற்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன.இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது மற்றும் உங்கள் முடி மற்றும் சருமத்திற்கு நல்ல பலன்களைத் தருகிறது.இது ரத்தம் மற்றும் சிறுநீரின் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும். இதில் சபோனின்கள் மற்றும் டெர்பெனாய்டுகள் உள்ளன.அவை ரத்தத்திலிருந்து செல்களுக்குக் குளுக்கோஸை நகர்த்த உதவும்.

அருகுலா கீரை:

அருகுலாவில் சர்க்கரை, கலோரிகள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே, இரும்பு மற்றும் கால்சியம் உள்ளிட்ட பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன.

இது ரத்தம் உறைவதற்கு உதவுகிறது. மேலும், எலும்பு, பல் ஆரோக்கியம், தசை செயல்பாடு மற்றும் நரம்புச் செயல்பாடு ஆகியவற்றிற்கும் இது அவசியம்.

புளி:

புளியில், பொட்டாசியம் மற்றும் பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் வீக்கத்தைக் குறைக்கின்றன. ஃபிளாவனாய்டுகள் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட இயற்கை தாவர ரசாயனங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, புளிப்பு சுவை அல்லது புளி சரியான தேர்வாக இருக்கும்.

Trending News

Latest News

You May Like