1. Home
  2. தமிழ்நாடு

பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்.. பிறந்தநாள் இளைஞர்கள் கைது..!

பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்.. பிறந்தநாள் இளைஞர்கள் கைது..!


கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் சமீபகாலமாக பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி வரும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பினு என்ற ரவுடி ஆரம்பித்து வைத்த கலாசாரம் என்றே கூறலாம். ஆனால் தற்போது பினுவின் நிலைமை என்னவென்று அனைவரும் அறிந்ததே.

ரவுடிகளை தொடர்ந்து கல்லூரி மாணவர்களும் இந்த கலாசாரத்தை கையில் எடுத்துள்ளனர். அந்தவகையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த ஊ.மங்கலம் அண்ணாநகர் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தெய்வேந்திரன் (22).

கடந்த 14ம் தேதி இவர் தனது பிறந்தநாளை நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், பிரதாப் ஆகியோருடன் வீட்டின் அருகே பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

மேலும் அதனை வீடியோ எடுத்து சமுக வலைதளங்கள் மூலம் பதிவிட்டுள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது இளைஞர்கள் திரண்டு பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்.. பிறந்தநாள் இளைஞர்கள் கைது..!

இதுதொடர்பாக ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து பட்டா கத்தியுடன் கேக் வெட்டிய இளைஞர்கள் தெய்வேந்திரன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

newstm.in 

Trending News

Latest News

You May Like