லிஃப்ட் கேட்டு நூதன முறையில் பைக் திருட்டு..! போலி ஊர்க்காவல் படையினர் அட்டகாசம்..

லிஃப்ட் கேட்டு நூதன முறையில் பைக் திருட்டு..! போலி ஊர்க்காவல் படையினர் அட்டகாசம்..

லிஃப்ட் கேட்டு நூதன முறையில் பைக் திருட்டு..! போலி ஊர்க்காவல் படையினர் அட்டகாசம்..
X

சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த பிரகாஷ்(24), பூந்தமல்லியில் தனது தாயாரை விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். பின்னர், சென்னை காவல் துறை ஆணையரகம் அருகே இரண்டு நபர்கள் அவரை மறித்துள்ளனர். தாங்கள் ஊர்க்காவல் படையினர் எனவும் தங்களுக்கு லிப்ட் தரும்படியும் கேட்டுள்ளனர்.

இருவரையும் ஏற்றிக் கொண்ட பிரகாஷ் வேப்பேரி காவல் நிலையம் எதிரே சென்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மூன்று பேர் ஒரே வண்டியில் வருவதை பார்த்து நிறுத்தியுள்ளனர்.

போலீசாருக்கு சிறிது தூரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு, தான் பைக்கில் வந்த காரணத்தை போலீசாரிடம் சென்று கூறியுள்ளார். அந்த நேரத்தில், ஊர்க்காவல் படை என கூறிய இரண்டு நபர்களும் பிரகாஷின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் சென்றுவிட்டனர்.
 

 
இது தொடர்பான புகாரில், போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும் ஊர்க்காவல் படையினர் இல்லை எனவும் அவர்கள் இரு சக்கர வாகன திருடர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it