பிக்பாஸ் தமிழ் 8 குழுவில் இருந்த நபர் திடீர் தற்கொலை!
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் 50 நாட்களைக் கடந்து வருகிறது. இந்த சீசன் ஆரம்பம் முதலே சலிப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக இணையத்தில் சொல்லி வருகின்றனர்.
வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த சிவகுமார் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆண்கள் vs பெண்கள் என இருந்த டீமும் கலைக்கப்பட்டு தற்போது எல்லோரும் தனிப்பட்ட முறையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை நூற்றுக்கணக்கானோர் தவிர பணிபுரிந்து வருகின்றனர் என்பதும் இயக்குனர் டீம், உதவி இயக்குனர்கள் டீம், அசோசியேட் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றி வந்த ஸ்ரீதர் என்பவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது மரண செய்தி பிக் பாஸ் குழுவினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீதர் மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.